Friday, May 24, 2019

Introduction - D2H Story



கணவனிடமிருந்து பிரிந்துவந்த வாழ்வில் விரக்தியடைந்த இளம்பெண், இறைஞானம் பெற்ற ஒருவரால் வழிகாட்டப்பட்டு, விழிப்புணர்வுடன் வாழும் வழியைக் கற்றுக்கொண்டு, மீண்டும் கணவனோடு சேரும் கதையைச் சொல்லும் குறுநாவல் இது.

குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு. அதை விதிகளாகச் சொல்வதைவிட, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்து இந்தக் கதையை எழுதினேன்.

இம்மூன்று தத்துவங்களும் ஆன்மீகத் தத்துவங்களாதலால், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சரி, அல்லது எந்த ஒரு மதத்தையும் சேராதவராக இருந்தாலும் சரி, இம்மூன்று ஆன்மீகத் தத்துவங்களையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில் எந்த ஒரு தடையுமில்லை.

இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால், இக்கதையில் விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் உண்மையானவை; நிஜ வாழ்க்கையில் கடைபிடித்தால் பயன்தரக்கூடியவை.

இது ஒரு குறுநாவல். மொத்தம் பதினாறு அத்தியாயங்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் முழு நாவலையும் வாசித்துவிடலாம்.

நாவலின் அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு, கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும். அத்தியாயங்களின் லிங்க்ஸ், கீழிருந்து மேலாக முதல் அத்தியாயத்திலிருந்து பதினாறாவது அத்தியாயம் வரை கொடுக்கப்பட்டிருக்கிறன.

NOTE: English Version of this Story is available for free reading on Wattpad - https://www.wattpad.com/story/176571208-despair-to-hope-completed

No comments:

Post a Comment